முதியோர் இல்லத்தில தம் பெற்றோரை கொண்டு பொய் சேர்க்கும் அக்கரைப்பற்று புத்திஜீவிகள் பற்றி அறியக்கிடைத்தது… மிகவும் மன வருத்தம்…
ஒருவர் கூறினார் “ஒரு முதியவரை கடந்த இரண்டு வாரமாக காணவில்லை, அப்போது அவருடைய பேரப்பிள்ளைகளிடம் விசாரித்த போது, ‘உம்மப்பா/வாப்பப்பா மூதூருக்கு போய் இருக்கிறார்’ என்று கூறினார்கள்.. சில நாட்களின் பின் மட்டக்களப்பு சென்று வந்த ஒரு நண்பரின் ஊடாக அந்த முதியவர் தன் ::படித்த:: மகன்/மகள் மாரால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது…

அல்-குர்-ஆன் ஸூரத்துல் பலத்(நகரம்) [மக்கி] இல் மூன்றாவது வசனத்தில் الله, தந்தை மீதும் (சில தர்ஜுமாக்களில் பெற்றோர் என குறிப்பிடப்படுகிறது) சத்தியம் செய்கின்றான்..

அந்த சூரா பின்வருமாறு விரிகின்றது

.بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

90:1 لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ
90:1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2 وَأَنتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ
90:2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:3 وَوَالِدٍ وَمَا وَلَدَ
90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4 لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
90:4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:5 أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
90:5. “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6 يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
90:6. “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
90:7 أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
90:7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:8 أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
90:8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
90:9 وَلِسَانًا وَشَفَتَيْنِ
90:9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:10 وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11 فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
90:11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12 وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
90:12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:13 فَكُّ رَقَبَةٍ
90:13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:14 أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ
90:14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15 يَتِيمًا ذَا مَقْرَبَةٍ
90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16 أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ
90:16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:17 ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
90:17. பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:18 أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
90:18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19 وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
90:19. ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20 عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
90:20. அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

இந்த சூரா ஒரு பொதுவான சமூகத்துக்கு தேவையான ஒரு ஒழுக்கக்கோவையின் மிகவும் சுருக்கப்பட்ட சாராம்சமாக இருக்கிறது (abstraction).

இவ்வாறான ஒரு, புனித மக்கா நகரில் இறக்கி வைக்கப்பட ஒரு அத்தியாயத்தில் الله, தந்தைப்பற்றி அல்லது பெற்றோர் மீது சத்தியமிட்டு கூறுவதன் மூலம் அவர்களின் சிறப்பை விளக்குகின்றான்.

மேலும் பல வசனங்களில் அல்-குர்-ஆன் பெற்றோரை பற்றி குறிப்பிடும் பொழுது :

46(ஸூரத்துல் அஹ்காஃப் ):15. 
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

31(ஸூரத்து லுக்மான்):14.
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

27( ஸூரத்துந் நம்ல்):19.
அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

6(ஸூரத்துல் அன்ஆம்):151.
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

image

மேற்கூறப்பட்ட அல்-க்கு-ஆன் வசனங்கள் மிகவும் தெளிவாக பெற்றோரை கண்ணியப்படுத்தல் பற்றி கூறி இருக்க, படித்த மட்ட பிரமுகர்கள் ஏன் தம் பெற்றோரை இவ்வாறு அவர்களுடைய முதிய வயதினிலே ஒதுக்கி(ஒடுக்கி) வைக்கிறார்கள்…

 

(யாரயும் குறிப்பிட்டு இந்த பதிவு மேற்கொள்ளப்படவில்லை)

Advertisements