யார் இந்த ஸ்டீவ் ஜோப்ஸ்…

அப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான்.  அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். சிறுவன் அன்றிரவு அப்பாவுக்கு வந்து நடந்ததை சொல்கிறான். அவர் நம்பவில்லை. எலேக்ட்ரோனிக் அம்பிளிபயர் இல்லாமல் இதை செய்ய முடியாது என்கிறார். சிறுவன் செய்து காட்டுகிறான். அப்பா மகனை பெருமிதமாக பார்க்கிறார்.

சிறுவன் வளர்கிறான். பெற்றோருக்கு அவன் ஒரு சாதாரண பிள்ளை இல்லை என்பது தெரியவருகிறது. அவன் திறமைக்கு தோள் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய பாடசாலை பிடிக்கவில்லை என்கிறான். மாற்றிக் கொடுக்கிறார்கள். அவன் இஷ்டப்படியே அவனுடைய சின்ன சின்ன ஆராய்ச்சிகளுக்கு இலத்திரனியல் பொருட்களை வாங்கி கொடுத்தனர். இப்போது அந்த பக்கத்து தெரு என்ஜினியர் அவனுக்கு இன்னும் சிக்கலான சவால்களை கொடுக்கிறார். ரேடியோ, டிவி என்று புது புது இலத்திரனியல் கருவிகளை வடிவமைக்கவேண்டும். அவன் இது தன்னால் இயலாது என்று நினைக்கும் போதெல்லாம் அப்பாவும் என்ஜினியரும், இல்லை இல்லை உன்னால் முடியும் என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்கள். அவன் தான் உண்மையிலேயே ஒரு திறமை சாலி என்ற தன்னம்பிக்கையை அவனுக்கு ஊட்டினார்கள். ஒருவரும் discourage செய்யவில்லை. வேண்டாத வேலை என்று ஏளனமாக பார்க்கவில்லை.

அந்த ஊரில் இப்படியான ஆர்வமிகு சிறுவர்களுக்கென பெரியவர்கள் குழுக்களை அமைத்தார்கள். அந்த சிறுவர்கள் செவ்வாய்கிழமைகளில் ஒன்று கூடுவார்கள். ஒரு துறை சார்ந்த நிபுணர் வந்து சின்ன விஷயம் ஒன்றை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். ஒரு நாள் LED, இன்னொரு நாள் Calculator, இன்னொரு நாள் computer. இந்த சிறுவர்கள் தாங்களும் ஏதாவது ஒரு project செய்யவேண்டும். அந்த சிறுவன் ஒரு இலத்திரனியல் “Frequency Counter” செய்ய தீர்மானித்தான். அதற்கு அவனுக்கு சில கருவிகள் தேவைப்பட்டது. உடனே ஒரு phone call போட்டான். யாருக்கு? அந்த ஊரிலேயே மிகப்பெரிய கம்பனியின் தலைவருக்கு! இந்த பத்து வயது சிறுவன், 3000 தொழிலாளர் வேலை பார்க்கும் நிறுவன தலைவருக்கு தயக்கமே இல்லாமல் call போடுகிறான். அவரும் அவனுக்கு செவி மடுக்கிறார். உடனே அந்த கருவிகள் கிடைக்க வழி செய்கிறார். அத்தோடு விட வில்லை, அவனுக்கு ஒரு சின்ன வேலையையும் தன் நிறுவனத்தில் போட்டு கொடுக்கிறார்.

சிறுவன் வளர்கிறான். குட்டி குட்டியாய் இலத்திரனியல் கருவிகள் கண்டு பிடிக்கிறான். அவனை போலவே ஆர்வம கொண்ட இன்னொரு சிறுவனை கண்டு பிடிக்கிறான். இருவரும் சேர்ந்து சின்ன சின்ன இலத்திரனியல் project செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஆர்வம் மிக்க இளைஞர்கள் கூடும் கூட்டத்தில் தம் கருவிகளை காட்சிப்படுத்தி சிலாகிக்கிறார்கள். மற்ற இளைஞர்களின் வேலைகளையும் பார்த்து புதிது புதிதாய் கற்றுகொள்கிறார்கள். அந்த சிறுவனின் நண்பனுக்கு புது ஐடியா ஒன்று வருகிறது.  அதை செய்ய அந்த ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் வியாபாரி உதவுகிறார். பணம் போதவில்லை என்று வீட்டில் உள்ள வாகனத்தை விற்க அப்பா சம்மதிக்கிறார். வீட்டின் கராஜில் பரிசோதனை கூடம். ஆபீஸ். இடம் போதவில்லை என்று இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் சமையலறைக்குள் வருகிறது. தாயார் ஒன்றுமே சொல்லவில்லை. மகனின் திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை.

அந்த இளைஞன் வளர்கிறான். நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கிறான். அவன் நிறுவனம் கணணி வன்/மென் பொருட்களில் சாதனை படைக்கிறது. அவனோடு வளர்ந்த சமகால சிறுவர்கள் எல்லாம் பெரிய பெரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகின்றனர்! அந்த நகரமே தகவல் தொழில்நுட்பத்தின் “மக்கா” தலமாக மிளிர்கிறது. யார் அவன்?

ஆம் அந்த சிறுவன் தான் ஸ்டீவ் ஜோப்ஸ்.  அவனின் நண்பன் தான் Apple Personal Computer ஐ முதன்முதலில்  வடிவமைத்த Steve Vozniak. அவன் phone பேசிய நிறுவன அதிபர் தான் HP நிறுவனத்தை Packard என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய Hewlett. அவன் காலத்தின் உருவானவர் தான் அவனின் சமவயது, கணணி யுகத்தின் இன்னொரு பிதாமகன் Bill Gates. இவர்கள் சேர்ந்து கண்டு பிடித்தவை தான், Apple Computers, Macintosh, Windows என்று உலகம் முழுக்க வியாபித்து இன்றைக்கு iPod, iPhone, iPad என்று கணணி உலகை ஆண்டு கொண்டு இருக்கிறது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s